172
யாழ்.வட்டுக்கோட்டை – சுழிபுரம் பறாளை வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று நள்ளிரவு வாளுடன் புகுந்த இருவர் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நள்ளிரவில் வாளுடன் வீட்டுக்குள் புகுந்த இருவர் வீட்டிலிருந்தவர்களை வாள் முனையில் அச்சுறுத்தி , ஒரு பவுண் சங்கிலி, அரைப்பவுண் தோடு, அரைப்பவுண் மோதிரம் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டிற்கமைய வட்டுக்கோட்டை காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love