சென்னை தீவுத்திடவில்இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சியான ரொக் வித் ராஜா என்ற நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதில் பல பின்னணி பாடகர்கள் பங்கேற்று இளையராஜாவின் இசையில் பாடினார்கள். இந்த நிகழ்வில் நடிகர் தனுஷ் தனது மகன்கள் லிங்கா, யாத்ரா உடன் பங்கேற்றார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து, இளையராஜாவின் இசையில் வெளிவந்த ‛நிலா அது வானத்தின் மேலே’ பாடலை யுவன் சங்கர் ராஜா,கார்த்திக் ராஜா உடன் இணைந்து நடிகர் தனுஷ் பாடினார். அதோடு இந்த பாடலை தனது மகன்களுக்கா ஒரு தாலாட்டு பாடலாக மாற்றி உள்ளதாகக் தொிவித்த தனுஷ் இளையராஜாவின் அனுமதியோடு, அந்த பாடலின் மெட்டுக்கு ஏற்றபடி தான் உருவாக்கிய பாடல் வரிகள் கொண்டு தாலாட்டு பாடலாக பாடினார்.
இந்த நிகழ்வினை இளையராஜாவை மட்டுமின்றி அங்கிருந்த பார்வையாளர்களும் பாராட்டியுள்ளனா்
இதேவேளை குறித்த நிகழ்ச்சியில் எஸ்பிபியை நினைவு கூர்ந்து மேடையில் இளையராஜா. உருக்கமாக பேசியுள்ளாா்.
எஸ்பிபியை நினைவு கூற இந்த மேடையை பயன்படுத்துகிறேன். அவரை பற்றிக் கூற வார்த்தைகளே வரவில்லை, என்னுடை இசை பயணத்தில் எஸ்பிபிக்கு பெரும்பங்கு உண்டு என இளையராஜா தொிவித்துள்ளாா்.
எஸ்.பி.பிக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தும் படி அனைவரிடத்திலும் கேட்டுக்கொண்ட அவா் ஆந்திரா, கொல்கத்தா, மும்பை என எங்கு சென்றாலும் ஆர்மோனியப் பெட்டியுடன் தானும் பாலசுப்பிரமணியனும் சென்று பாடுவோம் எனத் தொிவித்தாா்.
கொரோனாவால் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், லதா மங்கேஷ்கர் மறைந்தது வருத்தத்திற்குரியது என்று கவலையை வெளிப்படுத்தினார்.
இதையடுத்து, மௌனராகம் படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய மன்றம் வந்த தென்றலுக்கு என்ற பாடலை எஸ்பிபியின் மகன் எஸ்பிபி சரண் பாடினார். அடுத்த மௌனராகம் திரைப்படத்தில் வரும் மேகம் கொட்டட்டும் என்ற பாடலை கார்த்தி பாடினார்.
இந்த இசை நிகழ்ச்சியில் முதன்முறையாக இளையராஜாவுடன் இணைந்து பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பாடினார். யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி,கங்கை அமரன்,பவதாரணி, என ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.