
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த உலகின் முதலாம்தர டென்னிஸ் வீராங்கனையான ஆஷ்லே பார்டி திடீரென தனது ஓய்வு குறித்த முடிவை அறிவித்துள்ளார். . 25 வயதான இவர் மூன்று முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். தற்போது உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து வரும் நிலையில் திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
‘‘டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்கும்போது எனக்கு கடினமானதாகவும், உணர்ச்சிகள் நிறைந்ததாகவும் இருந்தது. இந்த செய்தியை எப்படி உங்களிடம் பகிர்ந்து கொள்வது என்பது தெரியவில்லை. என்னுடைய சிறந்த நண்பரிடம் உதவி கேட்டுக்கொண்டேன். எனக்கு உதவியாக இருந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என அவா் தெரிவித்துள்ளார்.
ஆஷ்லே பார்டி 2019-ல் பிரெங்ச் ஓபனையும், 2021-ல் விம்பிள்டனையும், 2022-ல் அவுஸ்திரேலிய ஓபனையும் வென்றுள்ளார்
Spread the love
Add Comment