தெலுங்கானாவில் செகுந்தராபாத் மாநிலத்தில் மரக் குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 தொழிலாளர்கள் உயிாிழந்துள்ளனா். அதிகாலை 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் குடோனில் இருந்த 15 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவா்களில் 13 போ் உயிாிழந்துள்ளனா்.
அதிகாலை நேரம் என்பதால் தொழிலாளர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். குடோன் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. புகை மூட்டம் ஏற்பட்டதால் தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மேலும் 7 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மீண்டும் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் குடோனின் மேற்கூரை இடிந்து அங்கு இருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே 13 தொழிலாளர்கள் உயிாிழந்துள்ளனா். . இதில் 11 போின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன
. மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.