சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறப்பான செயல்பாட்டுக்கு டோனியின் தலைமை தான் காரணம் என்று கூறி வரும் நிலையில், அவா் தலைமைப் பதவியில் இருந்து விலகியுள்ளதனையடுத்து புதிய தலைவராக ஜடேஜா நியமிக்கட்டுள்ளாா்.
ஐ.பி.எல் போட்டியில் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சிறந்த அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 முறை இறுதி போட்டிக்கு நுழைந்து சாதனை படைத்துள்ளது. அதில் 4 தடவை (2010, 2011, 2018, 2021) ஐ.பி.எல் கிண்ணத்தினை வென்று மும்பைக்கு அடுத்த படியாக உள்ளது.
12 முறை ஐ.பி.எல்.லில் பங்கேற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி . சஸ்பெண்ட் காரணமாக 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதில் ஒரு தடவை தவிர தான் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் பிளே ஒப் சுற்றுக்கு முன்னேறி முத்திரை பதித்தது.
4 முறை சம்பியன், 5 தடவை 2-வது இடம் என . உச்சநிலையில் இருக்கிறது. 2020-ல் பிளே ஒப் சுற்றுக்குள் நுழையாத அந்த அணி அதில் இருந்து மீண்டு கடந்த ஆண்டு கிண்ணத்தினை வென்றிருந்தது
சி.எஸ்.கே.வின் சிறப்பான செயல்பாட்டுக்கு டோனியின் தலைமை தான் காரணம் எனத் தொிவிக்கப்பட்டு வரும் நிலையில் அவா் தலைமைப் பதவியில் இருந்து டோனி விலகியுள்ளாா்.
இந்தநிலையில் 5-வது முறையாக ஐ.பி.எல் கிண்ணத்தினை சி.எஸ்.கே. வெல்லுமா… என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ள நிலையில் புதிய தலைவராக ஜடேஜா தலைமைப் பொறுப்பினை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது