—————
26 மார்ச் 22- நாளை ( சனிக்கிழமை)
காலை 10 To இரவு 8 மணி வரை
—————-
புத்தகக் கண்காட்சி என்பது வெறும் ஒரு நிகழ்வல்ல! அது பெரும் பண்பாட்டினதும் அறிவினதும் சேகரங்களை கொண்டு வந்து சேர்ப்பதும் மற்றவர்களுக்கு கையளிப்பதுமான அரசியல் கலை, இலக்கிய சமூக அறிவு நிகழ்வாகும்!
எழுத்தும் வாசிப்பும் தனி மனிதர்களைத் தாண்டி, பொதுச் சமூகத்தின் ஆரோக்கியத்திற்கும் சிந்தனைக்கும் , மனித குல விடுதலைக்கும் பங்காற்றும் கூட்டு சமூகப் பொறுப்பினை கட்டமைத்து , தன்னையும் தாண்டி , பொது மனிதர்களை ஆக்கும் வல்லமை நூல்களுக்கும் , பண்பாட்டு, அறிவியல் வியாயபகத்திற்கும் இருக்கும் இடம் பெரிது!
நீங்கள் கற்றுக் கொண்டது மட்டுமல்ல, கற்றுக் கொள்ளவும் , தெரிந்து கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும் நமக்கு வெளியில் பெரும் சேகரங்களே உள்ளன என்பதை நேரடியாகவே உணர்ந்து கொள்ளும் தருணமது!
புகலிட நாடுகளில் , தமிழ் மொழியை முன்னிலைப்படுத்தி இப்படியான நிகழ்வுகள் நடப்பது என்பது மிகப் பெரிய பங்களிப்பாகும்! மொழியின் வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் ஆற்றும் பணிகளில் இப் பணி மிகப் பெரிது! இன்னொரு வகையில் சொன்னால் இப்படியான நோக்கத்திற்கான அடிப்படைகளில் இந்த முயற்சியே அடிப்படை அத்திவாரமாகும்!
தமிழில் குழந்தைகளுக்கான நூல்கள் தொடக்கம் 800க்கும் மேற்பட்ட தலைப்புகளில் தமிழின் மிக முக்கியமான பல் வகையான அரிய நூல்கள்! தமிழகம், ஈழம், புகலிட நாடுகளின் நூல்கள் ( சென்னை புத்தக கண்காட்சியில் வெளிவந்த நூல்கள் உட்பட )ஒரே இடத்தில்…
இந்த நிகழ்வு வெறுமனே புத்தக கண்காட்சியும்… விற்பனையுமல்ல,
*தமிழின் மிக முக்கியமான பல் வகையான , தமிழகம், ஈழம், புகலிட நாடுகளின் நூல்கள் ( சென்னை புத்தக கண்காட்சியில் வெளிவந்த நூல்கள் உட்பட )ஒரே இடத்தில்…
- இங்கிலாந்து வாழ் தமிழ் எழுத்தாளர்கள்/ படைப்புகள் பற்றிய நிகழ்வுகள்…
- புதிய நூல்களின் அறிமுகங்கள்….
- நூல் வெளியீடுகள்….
————
கடந்த 2 வருட பெருந்தொற்று காலத்தின் பின்னாக, அனைவரும் சந்திக்கும் புத்தக பண்பாட்டு, கலை இலக்கிய நிகழ்வு!
——-
- இங்கிலாந்து வாழ் தமிழ் எழுத்தாளர்கள்/ படைப்புகள் பற்றிய நிகழ்வுகள்…
- புதிய நூல்களின் அறிமுகங்கள்….
- நூல் வெளியீடுகள்….
————
இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உங்களை அழைக்கிறோம்!
கடந்த 2 வருட பெருந்தொற்று காலத்தின் பின்னாக, அனைவரும் சந்திக்கும் புத்தக பண்பாட்டு, கலை இலக்கிய நிகழ்வு!
——-
Tamil Book Fair – London
Kerala House
671, Romford Road
Manor Park, Eastham
E12 5AD
( near the tube stations -Manor Park, Eastham )
……
26 March 22
Saturday
10am to 8pm