169
யாழ்ப்பாணம் அராலி பகுதியில் வீடு ஒன்றினை உடைத்து பெறுமதியான கையடக்க தொலைபேசி ,மற்றும் பணம் என்பவை திருடப்பட்டுள்ளது.அராலி வடக்கு , செட்டியார் மடம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தவர்கள் வெளியில் சென்று இருந்த சமயம் , வீட்டின் கதவினை உடைத்து உட்புகுந்த திருடர்கள் , வீட்டில் இருந்த பணம் மற்றும் பெறுமதிவாய்ந்த கையடக்க தொலைபேசி உள்ளிட்டவற்றை திருடி சென்று உள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love