Home இலங்கை இலங்கை மக்களுக்கு இது மிக சவாலான காலம் – ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கை மக்களுக்கு இது மிக சவாலான காலம் – ஐரோப்பிய ஒன்றியம்

by admin

படம் :நன்றி ஏஎப்பி)

இலங்கையில் அவசர காலச் சட்டத்தை அமுல் செய்த கையோடு நாடு முழுவதும் 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை அரசுஅறிவித்திருக்கிறது. ஆயுதம் தாங்கியஇராணுவத்தினர் நாடெங்கும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணவர்த்தனவின் கீழ் முன்புசெயற்பட்ட இராணுவத்தின் 53 ஆவதுபடைப் பிரிவினர் கொழும்பில் கடமைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றுஉறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவகிக்கின்றன.

நாடு போர்க் காலத்தில் கூட இருந்திராத அளவில் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. வெளிநாட்டுநாணய வங்குரோத்து நிலையும் பணவீக்கமும் அத்தியாவசிய உணவு, மருந்து பொருள்களது தட்டுப்பாட்டையும் விலை உயர்வையும் ஏற்படுத்தியுள்ளன.

மின் தடையால் நாடு முழுவதும் இருளில் மூழ்கி வருகிறது. நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக வீதிப் போராட்டங்களைத் தொடக்கியுள்ளனர். இலங்கையில் அவசர காலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளது.

அமைதி வழியில் சுதந்திரமாக ஒன்றுகூடுதல் உட்பட கருத்துச் சுதந்திரம் போன்ற சகல குடிமக்களுக்குமான ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்குமாறு அது இலங்கை அரச அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.

“இலங்கை மக்களுக்கு இது மிகச் சவாலான காலம். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நிலைமையை மிக உன்னிப்பாக அவதானித்து வருகின்றன” – என்று ஒன்றியம் விடுத்த செய்திப் பதிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை, கொழும்பில் உள்ள ஜேர்மனியத் தூதர் அவசரகாலச் சட்டம் அமுலுக்கு வந்திருப்பதைக் குறிப்பிட்டு வெளியிட்ட ருவீற்றர் பதிவு ஒன்றில், ” மக்கள் வீதிகளில் இறங்குவது அவசரநிலைமை(emergency) அல்ல. அவசரநிலைப் பிரகடனம் அவர்கள் மேலும் வீதிக்கு வரவே வழிவகுக்கும். காரணத்தையும் விளைவுகளையும் கணக்கில்எடுங்கள்” – என்று எழுதியிருக்கிறார்.

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதர்ஜூலி ஷூங் (Julie Chung)”இலங்கை மக்கள் அமைதி வழிகளில் எதிர்ப்பை வெளிப்படுத்தும் உரிமை உடையவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு உடனடி உதவியாக 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலைக் கடனுக்கு வழங்குவதாகப் புதுடில்லி தெரிவித்துள்ளது. அதேசமயம் இந்திய வர்த்தகர்களால் வழங்கப்பட்ட40 ஆயிரம் தொன் அரிசியையும் இந்தியா கொழும்புக்கு வழங்குகிறது.

இதற்கிடையில் இலங்கையில் தோன்றியுள்ளஅமைதியின்மையை அடுத்து இந்தியப்படைகள் அங்கு அனுப்பப்படவுள்ளனஎன்று பகிரப்படும் தகவல்களை கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் மறுத்துள்ளது.

( —————————————————————— –

பாரிஸிலிருந்து குமாரதாஸன். 02-04-2022

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More