
எரிபொருள், சமையல்எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மின் துண்டிப்பு என்பவற்றிலும் பார்க்க கடுமையான உணவுப் பற்றாக்குறை நிலை ஏற்படக்கூடும் என்பதை யூகிக்கக்கூடியதாக இருப்பதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளாா்.
நேற்றையதினம் காலை நாடாளுமன்ற அலுவல்கள் ஆரம்பமான போது விசேட உரையொன்றை ஆற்றிய போதே பாநாயகர் இதனைத் குறிப்பிட்டுள்ளாா். .
அரசியல் நோக்கத்தை புறம்தள்ளி இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசியல் யாப்பு மற்றும் ஜனநாயகத்துக்குட்பட்ட வகையில் பொது வேலைத்திட்டம் ஒன்றை வகுத்து அதனை செயற்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்ள்ளாா்.
கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் சிறப்புரிமைகளை பாதுகாப்பவர் என்ற வகையில் இதனை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள அவர் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.
Add Comment