193
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தெடதுடன் எதிர்வரும் 18 ஆம் திகதி அவரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்ட காலப்பகுதியில் பொதுமக்களின் பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்த முறைப்பாடு தொடா்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
Spread the love