169
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்திலிருந்து விலகி, சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்துள்ள பங்காளிகளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து விலகிய, 41 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்றிரவு 7 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்குமாறே கோரியுள்ளனர். இதேவேளை, விமல் வீரவங்ச உள்ளிட்டவர்கள், அதனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
Spread the love