
அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்த, அச்சுவேலி பத்தமேனி பகுதியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை கனகரத்தினம் 70 வயது முன்னோக்கி நகர்ந்த பாரவூர்தியில் நசியுண்டு உயிரிழந்துள்ளார்.
சிறு வீதியிலிருந்து பிரதான வீதிக்குள் நுழைய இன்று (10.04.22) காலை 10 மணியளவில் முதியவர் முற்பட்ட வேளையில், டீசலுக்காக காத்திருந்த பாரவூர்தி நகர்ந்ததால் சில்லுக்குள் நசியுண்டு முதியவர் உயிரிழந்துள்ளார்.
சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பார ஊர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்த அச்சுவேலி போக்குவது காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
Spread the love
Add Comment