326
இலங்கையில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டைப் போக்க வெளிநாடுகள் சில உதவ முன் வந்துள்ளன. இதன்படி, 101 வகையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரண தொகையொன்று எதிர்வரும் புதன்கிழமை (27.04.22) இந்திய அரசாங்கத்திடம் இருந்து நன்கொடையாக பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இதேவேளை நன்கொடையாக 340 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகளை வழங்குவதற்கு இந்தோனேசியாவும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Spread the love