பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 போ் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவானினால் நேற்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனா்.
கடந்த வருடம் மட்டக்களப்பு கிரான் கடற்கரையில் முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவேந்தலை நினைவு கூர்ந்தமைக்காக இவா்கள் கைது செய்யப்பட்டிருந்தனா்.
இந்த நினைவேந்தலை நினைவு கூர்ந்த வடக்கு கிழக்கு முன்னேற்றகழக தலைவர் வி.லவக்குமார் உள்ளிட்ட 10 பேரையும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்திருந்த கல்குடா காவல்துறையினா் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்ததனை தொடர்ந்து அவா்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனா்.
இதனை தொடர்ந்து சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் கடந்த டிசம்பர் 8 ம் திகதி குறித்த 10 பேரையும் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் பிணையில் விடுவித்திருந்த நிலையில் நேற்றையதினம் அவா்கள் அனைவரும் வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனா்.