இலங்கையின் வளங்கள் சூறையாடப்பட்டமைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பிலான தகவல்களை அம்பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அண்மையில் இலங்கையர்கள் சிலரை சந்தித்த, Nevada மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும், ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி உறுப்பினரும், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினருமான Steven Horsford தெரிவித்துள்ளார்.
நாட்டை ஆட்சி செய்யும் ஒரு குடும்பம் காரணமாக இலங்கை வங்குரோத்து நிலையினை எதிர்நோக்கியுள்ளமை தொடர்பாக அமெரிக்க தலைவர்களை தௌிவுபடுத்துவதாக Steven Horsford உறுதியளித்துள்ளார்.
இலங்கையின் வளங்கள் சூறையாடப்பட்டமைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை அமெரிக்க காங்கிரஸ் சபையுடன் இணைந்து அம்பலப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.