ரம்புக்கனையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கேகாலை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன உள்ளிட்ட நால்வர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகம் நடத்த அனுமதி வழங்கியமைக்காகவே சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சக கே.பி.கீர்த்திரத்ன கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.