அதிகாரத்தை வழங்கிய மக்களுக்கு அதனை மீளப் பெறும் உரிமை இருக்கிறது எனவும் அந்த உரிமை அரசியலமைப்பில் உள்வாங்கப்படுமாயின் மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளை அவர்களாலேயே பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் உத்தியோகபூர்வமாகக் கிடைக்கப்பெறும் என்றும் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
19 இற்கும் அப்பால் சென்று அதனை விடவும் ஜனநாயக ரீதியான திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடெனவும், எவ்வாறிருப்பினும் 19 பிளஸ் என்பது அவசியம். ஆனால் அதுவும் போதுமானதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிர்வாக சேவை ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டபோதே மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்