ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோவுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையில், கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதுடன் இவ்விருவரும் பகிரங்கமாக சண்டையிட்டுக் கொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தின் போதே இவ்வாறு இருவரும் பகிரங்கமாக சண்டையிட்டுக்கொண்டுள்ளனர். அவ்விருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டபோது அருகிலிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இருவரையும் விலகிவிட்டார்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவும் இவர்களைத் தடுத்துள்ளார். கட்சியின் சிரேஷ்ட உப- தலைவர் என்றவகையில், தனக்கு உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்காமையை இட்டே, சரத் பொன்சேகா வினவியுள்ளார் என்றும், அதன்பின்னரே இவ்விருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது என்றும் அறியமுடிகின்றது.