168
தமிழகம் செல்ல முற்பட்ட வவுனியா வாசிகள் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வந்து , அல்லைப்பிட்டி கடற்பகுதி ஊடாக இந்திய செல்ல முற்பட்ட வேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரையும் சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களை இந்தியாவிற்கு அனுப்பவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்ட நபர்கள் தொடர்பிலான விசாரணைகளையும் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
Spread the love