வன்முறைகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது.
நிட்டம்புவ பகுதியில் மூவரும், வீரக்கெட்டிய பகுதியில் இருவரும் இமதும பிரதேச சபையின் தலைவரும்மாக 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் நேற்று இடம்பெற்ற அமைதியின்மையில் காயமடைந்த 218 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இமதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமார தாக்குதலில் மரணம்!
இமதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமார, அவரது இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இரத்மலானை விமான நிலைய வளாகத்தை போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்துள்ளனர். விடிய விடிய அங்கு திரண்டிருந்த போராட்டக்காரர்கள் வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நைஜீரியாவில் இருந்து சரக்கு விமானம் ஒன்று திட்டமிடாத வகையில் இலங்கையைில் தரையிறங்குவதாக வெளியான தகவலை அடுத்து இந்த சுற்றி வளைப்புகள் இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையில் நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், காலிமுகத்திடல் கோட்டா கோ கம பகுதியில் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தீயிட்டு கொளுத்தப்பட்ட சொத்துக்களின் விபரம்.
நாட்டில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்க்காரர்கள் மற்றும் வன்முறைகளின்போது ஆஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அரசாங்கத்தின் சொத்துக்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன், சேதமும் விளைவிக்கப்பட்டிருந்தன.
Avenra Garden Hotel ஆர்பாட்டகாரர்களால் முற்றாக எரிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு மீரிகம வீதியில் உள்ள Avenra Garden Hotel ஆர்பாட்டகாரர்களால் முற்றாக எரிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள உலகின் விலையுயர்ந்த சொகுசு வாகனங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. லம்போகினி காரும் கொழுந்து விட்டு எரிகிறது.
மஹிந்தானந்தவின் அலுவலகம் மீது தாக்குதல்.
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் அலுவலகம் மீது நேற்று (9.05.22) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது..
நாவலப்பிட்டி நகரில் அமைந்துள்ள அலுவலகத்துக்கு முன்பாக டயர்களை எரித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், அலுவலகத்தின் மீது கல்வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதனால் அலுவலகம் சேதமடைந்த நிலையில், காவற்துறையினரால் போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டுள்ளனர்.
தென்னக்கோன்களின் வீடுகளும் தீக்கிரை
தம்புளை- யாபாகம பிரதேசத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார மற்றும் பிரமித பண்டார தென்னக்கோன் ஆகியோரின் வீடுகள் நேற்றிரவு தீக்கிரையாகியுள்ளன.
தம்புளை நகர மேயர் ஜாலிய ஓபாத மற்றும் அவரது தாய், சகோதரர்களின் வீடுகளும் தீவைக்கப்பட்டுள்ளன.
ஞான அக்காவின் வீடும் தப்பவில்லை!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பிரத்தியேக ஜோதிடரான ஞான அக்காவின் வீடும் நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அநுராதபுரத்தில் உள்ள வீடு மற்றும் ஞான அக்காவின் ஹோட்டல் ஒன்றும் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சேதமாக்கப்பட்ட சொத்துக்களின் விபரங்கள் வருமாறு:
1-சனத் நிஷாந்தவின் வீடு
2-திஸ்ஸ குட்டி ஆராச்சியின் வீடு
3-குருநாகல் மேயர் மாளிகை
4-ஜோன்ஸ்டன் வீடு மற்றும் அலுவலகம்
5-மொரட்டுவை மேயரின் வீடு
6-அனுஷா பாஸ்குவலின் வீடு
7-பிரசன்ன ரணதுங்கவின் வீடு
8-ரமேஷ் பத்திரனவின் வீடு
9-சாந்த பண்டாரவின் வீடு
10-ராஜபக்ஷ பெற்றோரின் கல்லறை
11- நீர்கொழும்பில் உள்ள அவன் கார்டன் ஹோட்டல்
12-அருந்திகவின் வீடு
13-கனக ஹேரத்தின் வீடு
14-காமினி லொகுகேவின் வீடு
15-காலியில் உள்ள ரமேஷ் பத்திரனவின் வீடு
16-மொரட்டுவை மேயர் சமன் லால் இல்லம்
17-லான்சாவின்-2 வீடுகள்
18-வென்னப்புவ நைனாமடம ட்ரெவின் பெர்னாண்டோ வீடு
19-அலி சப்ரியின் வீடு
20-பந்துல குணவர்தன வீடு
- வீரகெட்டிய மெதமுலன வீடு
22.கேகாலை மஹிபால ஹேரத் ஹவுஸ்
23-கொட்டிகாவத்தை ரேணுகா பெரேரா இல்லம்
24-கம்பஹா நாலக கொடஹேவா இல்லம்
25- விமல் வீரவன்சவின் வீடு
26-அசோசியேட் சூப்பர் சென்டர் காலி
27- சிறிபால கம்லத் வீடு
28- கெஹலிய ரபுக்வெல்ல வீடு
29-ரோஹித அபேகுணவர்தன இல்லம்
30-நீர்கொழும்பு குரான கிராண்டீசா ஹோட்டல்
31-காஞ்சனா விஜேசேகர இல்லம்
32-துமிந்த திசாநாயக்க வீடு
33-ஞானாக்கா வீடு