முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதனையடுத்து, திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமை, இளைஞர் குழுவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராஜபக்ஸ உள்ளிட்ட குடும்பத்தினரும் ரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களும் , திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து கப்பல் மூலம் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையிலேயே இவ்வாறு , இளைஞர் குழுவினர் கடற்படை முகாமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இதனால் திருகோணமலை கடற்படை முகாமை சூழலுள்ள பகுதிகளில் தற்போது பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது