Home இலங்கை போராட்டப்பிரதிநிதிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை

போராட்டப்பிரதிநிதிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை

by admin

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுவர்களின் பிரதிநிதிகள் இருவருக்கு அழைப்பாணை விடுப்பதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

கடந்த 9 ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற கலவரத்தில் சட்டத்தை நிலைநாட்டத் தவறியமை தொடர்பில் ஆராய்வதற்காக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று (13) ஆணைக்குழு முன்னிலையில் முன்னிலையாகியிருந்தாா்.

தொடர் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு தேசபந்து தென்னகோன் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கமளிப்பதற்காகவே அவா் அழைக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தொிவித்துள்ளது. .

இந்தநிலையில் காலி முகத்திடலில் இடம்பெற்றுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகள் இருவரை அழைத்து வெளிப்படுத்திய விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More