183
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிர்காலத்தில் தமது ஆதரவை வழங்கவுள்ளதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.
கொழும்பில் இன்று (14.05.22) எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்தபோதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த இஷாக் ரஹ்மான், எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ்.தௌபீக் மற்றும் பைசல் காசிம் ஆகியோரே எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்து தமது ஆதரவு குறித்து அறிவித்துள்ளனர்.
Spread the love