அமெரிக்காவின் நியயோர்க் மாகாணத்தில் உள்ள பஃபலோ(Buffalo) நகரில் செயல்பட்டு வரும் வணிக வளாகக் கட்டிடம் ஒன்றினுள் நேற்றையதினம் நுழைந்த இனந்தொியாத நபா் ஒருவா் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக 18 வயதான குறித்த நபரை சுற்றி வளைத்த காவல்துறையினா் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில் விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதன் நோக்கம் குறித்து இன்னும் தெளிவாக கண்டறியவில்லை எனவும் அதிகாாிகள் தொிவித்துள்ளனா்