169
வல்வெட்டித்துறையில் இருந்து ஆரம்பித்த முள்ளிவாய்கால் நோக்கிய பேரணி யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்கால் நினைவு தூபியை இன்றைய தினம் திங்கட்கிழமை சென்றடைந்தது.
இதன்போது பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு தீபமேற்றி மலரஞ்சலி செய்யப்பட்டு பல்கலைக்கழக மாணவர்களால் பேரணியாக வந்தவர்களுக்கும் பொதுமக்களுக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.
”இன விடுதலையை தேடி முள்ளிவாய்க்காலை நோக்கி ” என்ற கருப்பொருளில் இடம்பெறும் இந்த பேரணி வடக்கு மாகாணத்தில் இருந்து இன்று காலை ஆரம்பமானது. இவ் அஞ்சலி நிகழ்வில் சிங்கள மாணவர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது
Spread the love