ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினா் மாலன் ஜயதிலக்க ஆகியோாா் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
22 பேரை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் நேற்றைய தினம் பணிப்புரை விடுத்திருந்த நிலையில் இவ்வாறு இருவரும் கைது செய்யப்பட்டள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.