காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள “கோட்டா கோ கம”வுக்கு முன்பாக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளதுடன் தீக்சுடர் ஏற்றி, நினைவும்கூரப்பட்டுள்ளது. தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி ஒன்று அமைக்கப்பட்டு, இனம் கடந்து மக்கள் அந்த நினைவு ஸ்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்.
யுத்தத்தில் உயிரிழந்தவர்கள், யுத்தத்தின்போது காணாமலாக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களை நினைவுகூறும் முகமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கலக மாணவர்களுடன், தமிழர்களுடன் சிங்கள மக்களும் சிங்கள, கிறிஸ்தவ மதத் தலைவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
கடந்த காலங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் பொதுவாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடகிழக்கில் மட்டுமே நடத்தப்படும் என்பது மட்டுமல்லாமல் அதற்கு அரசாங்கத்தின் தீவிர எதிர்ப்பும் இருந்து வந்துள்ளது
இந்தநிலையில் . இந்த ஆண்டு அத்தகைய எதிர்ப்புகள் ஏதுமில்லை என்பதுமட்டுமல்ல. வரலாற்றில் முதல் முறையாக தமிழர்கள் – சிங்களவர்கள் இணைந்து இந்த நினைவேந்தலை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.