ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவை நேற்று (21.05.22) எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் நெருக்கடி நிலைவரத்திலிருந்து மீட்டெடுப்பது, அதற்குத் தேவையான மூலோபாய மற்றும் தந்திரோபாய ரீதியான ஆதரவைப் பெறுதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது அவருடன் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார்.
மாலைதீவின் மொஹமட் நஷீட்டும் சஜித்தும் சந்திப்பு!
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட், எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவை நேற்று (21) எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பின்போது, நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடி நிலைவரம் தொடர்பில் பேசப்பட்டதுடன், இலங்கையின் முன்நோக்கிய பயணத்திற்கு மாலைதீவினால் வழங்கப்படும் நட்பு ரீதியான ஆதரவிற்கு எதிர்க்கட்சித்தலைவர் அவரது நன்றி தெரிவித்துள்ளார்