அவுஸ்திரேலிய பிரதமர் தேர்தலில் அந்தோனி அல்பனீஸ் வெற்றியீட்டியுள்ளாா். நேற்றையதினம் நடைபெற்ற . அவுஸ்திரேலிய பிரதமரை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி தலைவர் ஸ்கொட் மாரிசன் மற்றும் தொழில் கட்சி தலைவர் அந்தோனி ஆல்பனீஸ் ஆகியோாிடையே கடும் போட்டி நிலவியது.
அவுஸ்திரேலியாவில் ஆட்சியைக் கைப்பற்ற மொத்தமுள்ள 151 உறுப்பினர் இடங்களில் 76 உறுப்பினர் இடங்கள் அவசியம் என்ற நிலையில், இதுவரை நடைபெற்று முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கையில் ஸ்கொட் மாரிசன் தலைமையிலான லிபரல் கட்சி கூட்டணி 52 உறுப்பினர் இடங்களையும், அந்தோனி அல்பனீஸ் தலைமையிலான தொழில் கட்சி 72 உறுப்பினர் இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
வெற்றி பெற 76 இடங்களே தேவை என்ற நிலையில் 72 உறுப்பினர் இடங்களை தொழில் கட்சி கைப்பற்றியதன் மூலம் அந்தோனி அல்பனீஸ் அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.