182
திருகோணமலை கடற்பகுதியில் சல்லிசம்பல்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினர் நேற்று (23.05.22) இரவு மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக இடம்பெயர முயன்ற 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படை குழு ஒன்று நிலாவெளி காவற்துறையினருடன் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கைது செய்யப்பட்டவர்களில் 7 பெண்களும் 3 குழந்தைகளும் அடங்குவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
Spread the love