எரிவாயு விநியோகம் பங்கீட்டு அட்டைக்கு பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவையாளரின் கண்காணிப்பின் அந்த அந்த பகுதி முகவர்கள் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
யாழில் கடந்த சில தினங்களாக எரிவாயு விநியோகத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு இருந்தன. இந்நிலையில் விநியோக நடவடிக்கைகளை குழப்பம் இன்றி மேற்கொள்வதற்காக நாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
இவ்வாறு சிலிண்டர் விநியோக நடவடிக்கையில் பல நடைமுறை சிக்கல்கள் உண்டு. அவை தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளோம். கலந்துரையாடல்களின் முடிவில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு , எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை குழப்பம் இன்றி முன்னெடுக்கபட்டுள்ளது. அதனை குழப்பம் இன்றி முன்னெடுக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
சிலர் கறுப்பு சந்தைகளில் அதிக விலைக்கு எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்வதாக எமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருகின்றன. அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டவுள்ளன என தெரிவித்தார்