171
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள வாகன திருத்துமிடம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வாகனத் திருத்துமிடத்தில் மோட்டார் சைக்கிளின் பாகம் ஒன்று மின்சாரம் மூலம் ஒட்டப்பட்டுக் கொண்டிருந்த போது, எழுந்த தீப்பொறியினால் மோட்டார் சைக்கிளில் தீப்பற்றியுள்ளது.
இதனையடுத்து வாகன திருத்துமிடத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சித்த போதும் , முயற்சி பயனளிக்காத நிலையில் மோட்டார் சைக்கிளின் பெரும் பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
Spread the love