155
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் துறவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் மாநகர சபைக்கு அருகில் நேற்றையதினம் சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்தில் மண்டைதீவு 7ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஓங்கார ரூபி (வயது 70) எனும் பெண் துறவியே உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை வீதி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த பெண் துறவி மாநகர சபைக்கு அருகில் உள்ள வீதிக்கு சடுதியாக திரும்ப முற்பட்ட வேளை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியே விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love