171
யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் இருவர் நேற்று (05.06.22) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளொன்றில் சென்ற இருவர் மதுபோதையில் உள்நுழைந்ததாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
இதன்போது மாணவர்கள் ஒன்றுசேர்ந்து குறித்த இருவரையும் பிடித்து காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love