யாழ்ப்பாண மாவட்ட செயலரின் பணிப்புரையின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரால் நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம், திருநெல்வேலி பிரதேசத்தில் 30இற்கு மேற்பட்ட வியாபார நிலையங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. அவற்றில் 7 விற்பனை நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரிசியை கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த ஐந்து விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் , நூடில்ஸ் மற்றும் பிஸ்கட் வகைகளை அதிக விலைக்கு விற்பனை செய்தமைக்காக இரண்டு விற்பனை நிலையங்களும் மொத்தமாக ஏழு வியாபார நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதென பாவனையாளர் அதிகார சபை உத்தியோகத்தர்களால் அறிக்கையிடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
மேலும், தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் பரிசோதனை, கண்காணிப்பு நடவடிக்கைகள் நடைபெறுமென மாவட்ட செயலர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது