யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் எதிர்வரும் ஜூலை 1ம் திகதி தொடக்கம் மீளவும் ஆரம்பமாகவுள்ளது என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட அமைச்சர் முன்னதாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று, விமான நிலையத்தை பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
சர்வதேச விமானங்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதோடு, இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விமானங்கள் வருகை தரும் என தான் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
அதனூடாக புலம்பெயர் தமிழர்கள் தமது தாயக நிலத்துக்கு நேரடியாக விமானமூடாக வருகை தர முடியும் என தெரிவித்தார்.