அப்பே ரட்ட(අපේ රට)
விதுர நேற்றுத்தான் கோட்டா கோ கமவில்(Gotta go
Gama) இருந்து
வீடு திரும்பியிருந்தான்.
காலி முகத்திடலின் உப்புக் காற்று அதிரப் போ போ என்று கத்தி அவனுக்குத் தொண்டை அடைத்துவிட்டிருந்தது.
அவன் மனைவி கடும்கோபத்தில் இருந்தாள்.
“எரிவாயு இல்லை
எரி எண்ணை இல்லை.
அரிசி இல்லை.
பாணும் இல்லைப் பருப்பும் இல்லை.
நீ கத்திப் போவானா அவன்?
போ காட்டுக்கு
விறகும் தேனும் கொண்டு வா” என்றாள்.
இரண்டு நாட்கள் சாப்பிடாவிடால் சாக மாட்டாய்.
ஈரப்பலா சாப்பிடு.
நாளைக்கு
நான் குருந்தூர் மலைக்குப் போகிறேன்.
மலையில் நல்ல தேனிருக்குமோ?
விளக்கமற்றவளே
தெய்வமடி.
மலையின் ஊரில் இருந்து
உச்சிவரை காவல்.
நெஞ்சை நிமிர்த்திச் சென்றான்.
உச்சியில் விகாரை எழுந்து கொண்டிருந்தது.
நூற்றாண்டுகளின் எச்சங்களில் இருக்கும் எழுத்துக்களைப் படிப்பதற்கான கண்களை அவன் கொண்டிருக்கவில்லை.
பெருமானை நிறுவுவதைக் கண்கள் பனிக்கப் பார்த்தான்.
இளம் துறவி பெருமை பொங்க வழிபாட்டை நவீன கமராவில் படம்பிடித்துக் கொண்டிருந்தான்.
விதுர
மகாதேரரின் காலில் பணிந்தெழுத்து
அடைத்த குரலென்றாலும் சொன்னான்:
ஹாமத்துறுவனே
அப்பே ரட்ட( ஸ்தானய/ස්ථානය)
அப்பே தெவியன்
தேவ அபிரா
ஆனி 2022