197
அமெரிக்க திறைசேரி திணைக்களம் – இராஜாங்க திணைக்களம் ஆகியவற்றின் உயர்மட்ட தூதுக்குழுவினர், இன்று அதிகாலை இலங்கையை சென்றடைந்துள்ளனர்.
இந்த தூதுக்குழுவினர் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கிருக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம், அறிக்கை ஒன்றின் மூலம் இதை தெரிவித்துள்ளது.
ஆசியாவிற்கான பிரதி உதவித் திறைசேரி செயலாளர் றொபர்ட் கப்ரொத், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பிரதி உதவி இராஜாங்க செயலாளரான தூதுவர் கெல்லி கெய்டர்லிங் ஆகியோர் இந்தத் தூதுக்குழுவில் உள்ளடங்குகின்றனர்.
Spread the love