160
ஊடக செயற்பாட்டாளரும், மொழிபெயர்ப்பாளரும் இலக்கியவாதியுமான அமரர் வின்சன் புளோறன்ஸ் ஜோசப் அவர்களது முதலாம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
குருநகர் புதுமை மாதா கோவில் கிழக்கு வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.
நினைவேந்தலின் போது அவரது உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவேந்தலில் நினைவுப்பேருரையினை அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன் “தமிழ் ஊடகப்பரப்பில் மொழிபெயர்ப்பியல் கலை” எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்டது.
Spread the love