யாழ். பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தர இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் ஸ்ரீ நாகவிகாரை விகாராதிபதி சாஸ்த்திரவேதி மீஹகஜதுரே சிறிவிமலதேரர் மற்றும் யாழ். மறை மாவட்ட ஆயர் கலாநிதி அருட்தந்தை ஜஸ்ரின் பீ ஞானப்பிரகாசம் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடி ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டார்.