யாழ் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐ.ஓ. சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்களுக்கு 72 வீதமும் அரச உத்தியோகத்தர்களுக்கு 28 வீதமும் எரிபொருள் விநியோகம் செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் எரிபொருள் விநியோகம் தொடர்பில் அவசர கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.
யாழ் மேலதிக மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
கலந்துரையாடலில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தினர், இராணுவத்தினர், காவல்துறையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர் கலந்து கொண்டனர்.
இதன்போது நீண்ட நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு எவ்வாறு எரிபொருட்களை விநியோகிப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இனிவரும் காலங்களில் வரும் ஐ.ஓ. சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வரும் எரிபொருளை எவ்வாறு விநியோகிப்பது என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது பொதுமக்களுக்கு 72 வீதமான எரிபொருட்கள் விநியோகிப்பதாகவும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுகின்ற அரச உத்தியோகத்தர்களுக்கு 28 விதமான எரிபொருள்களை விநியோகிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது.