கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்டோா் காவல்துறைப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய நெருக்கடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஸவின் அரசாங்கமே காரணம் எனவும்அவர் பதவி விலகவேண்டும் என்றும் கோரி, இன்று காலை ஹிருணிக்காவுடன் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
யுத்த வீரனான கோட்டாவை வெளியே வரச் சொல்லுமாறு கோஷமிட்ட ஹிருணிக்கா, பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரியளவிலான போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்வரும் ஜுலை மாதம் 9ஆம் திகதி வரை ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே தாம் தங்கியிருக்கப்போவதாக ஹிருணிக்கா தெரிவித்ததனையடுத்து கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஹிருணிக்கா உட்பட்டோா் ர் காவல்துறைப் பேருந்தில் ஏற்றி செல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இதேவேளை, ஜனாதிபதி மாளிக்கைக்கு தடைகளை மீறி செல்ல முயற்சித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
ஹிருணிகா பிரேமச்சந்திர கைது
July 6, 2022 8:01 am
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ர் கைது செய்யப்பட்டுள்ளாா். கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காகவே அவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
ஹிருணிகா பிரேமச்சந்திரவுடன் மேலும் 5 பெண்களும் 4 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட அவர்கள் விசாரணைகளுக்காக தற்போது காவல்துறைப் பேருந்தில் ஏற்றி அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தொிவிக்கின்றன.