ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகுவதற்கு நிமல் சிறிபால டி சில்வா முடிவு எடுத்துள்ளளதாக ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான சேவைகள் அமைச்சுக்கும் தனியார் நிறுவனமொன்றுக்கும் இடையில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நே்ற்றையதினம் நாடாளுமன்றில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தநிலையில் விசாரணைகள் முடியும் வரை ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் து தற்காலிகமாக பதவி விலகுவதற்கு நிமல் சிறிபால டி சில்வா முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளாின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.