முழு நாடும் கொழும்புக்கு” எனும் தொனிப்பொருளில் கொழும்பில் இன்று ( ) முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகின்ற நிலையில் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கொழும்பை நோக்கிப் படையெடுத்துள்ளனர்.
இந்தப் போராட்டத்துக்கு அதரவு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சிவில் சமூகத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்சங்கங்கத்தினரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் இந்தப் போராட்டத்தால் கொழும்பில் பரபரப்பான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. காவல்துறையினா் , கண்ணீர் புகைக்குண்டுத்தாக்குதல் மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்துவருகின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபயவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தை சுற்றி அமைக்கப்பட்ட இரும்புக்கம்பி வேலிகளையும் இழுத்து கீழே தள்ளிவிட்டு போராட்டக்காரா்கள் இல்லத்தின முற்றுகையிட முற்பட்ட போது காவல்துறையினா் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.