இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகத் துறைகளில் ஊகச் செய்திகளை நிராகரிப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயம் ருவிட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளது.
மேலும், இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயக அமைப்புகள் மற்றும் மதிப்புகள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் செழிப்பு மற்றும் முன்னேற்றத்தை விரும்பும் இலங்கை மக்களுடன் இந்தியா நிற்கிறது என்று உயர் ஸ்தானிகர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதேவேளை இந்தியாவின் அரசியல் பிரமுகர் சுப்ரமணியசுவாமியின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து எனவும் அது இந்திய அரசின் கருத்தாக கருதப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.