வன்முறைகளில் இருந்து விலகி அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றத்திற்கு ஆதரவளிக்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்வதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் டுவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள குறிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
அனைத்து வன்முறைகளையும் கண்டிப்பதாகவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்வதாகவும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அனைத்துத் தரப்பினரும் அமைதியான முறையில் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நீண்டகால பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறும்,
இலங்கையின் ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் அமைதியான அதிகார பரிமாற்றம் அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, ஜனநாயக ஆட்சி மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் எனவும் இலங்கைக்கான அமெரிக்க துரதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.