ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது பதவிவிலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக சபாநாயகாின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. . சிங்கப்பூர் சென்றடைந்தவுடன் தனது பதவிவிலகல் கடிதத்தை சமர்பிப்பதாக அவா் முன்னதாக அறிவித்திருந்தார்.
குறித்த பதவிவிலகல் கடிதத்தை 13ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் வழங்குவதாக ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்ததாக சபாநாயகர் முன்னர் குறிப்பிட்டிருந்தாா்
அதனையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஸ ,முதல் பெண்மணி மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று அதிகாலை இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் மாலைதீவுக்கு சென்றுள்ளனர்.
மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல ஜனாதிபதி மற்றும் குழுவினர் எதிர்பார்த்திருந்த போதிலும், நேற்றைய தினம் அந்த பணியை அவர்களால் முடிக்க முடியாமல் போனதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் சவுதி அரேபிய விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் அவர் இன்று மாலை சிங்கப்பூர் வந்தடைந்ததாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது.
அவர் சிங்கப்பூர் சென்றடைந்தவுடன் தனது பதவிவிலகல்கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்புவார் என ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்த நிலையில் அவர் தனது பதவிவலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் வருவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் புகலிடம் கோரவில்லை எனவும், தெரிவித்துள்ள அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு அவா்களுக்கு எவ்வித பாதுகாப்பும் வழங்கப்படவில்லை எனவும் அறிவித்துள்ளது.
பொதுவாக, புகலிடக் கோரிக்கைகளுக்கு வாய்ப்பளிக்காத நாடாக சிங்கப்பூர் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது