மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என இலங்கை தேசிய கிறிஸ்தவ பேரவை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் நாட்டின் வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கு அது தொடர்பில் அவதானம் செலுத்தவும் தீர்வுகளை முன்வைக்கவும் அனைத்துக் கட்சி அரசாங்கமொன்று உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் தாம் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும் இலங்கை தேசிய கிறிஸ்தவ பேரவை குறிப்பிட்டுள்ளது.
மேலும் நாட்டின் வங்குரோத்து நிலைமைக்கு அப்பால் தற்போதைய நிலைமைகள் அரசியல் பேரழிவை நோக்கிச் செல்லும் வகையில் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.