பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்யுமாறு கோரிய மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பதில் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றுக்கு கொண்டுவரப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வினிவித முன்னணியின் பொதுசெயலாளர் சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவக்கு இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு காலம் கடந்து தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய சட்டமா அதிபர் திணைக்களம், இவ்வாறானதொரு மனு தாக்கல் செய்யப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டதையும் மன்றில் எடுத்துரைந்திருந்தார்.
அத்துடன் இந்த மனுவை தள்ளுபடி செய்யுமாறு, பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்திருந்தாா் இந்த நிலையில், குறித்த மனுவை விசாரணைக்கு இன்று எடுத்த உயர் நீதிமன்றின் மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் மனுவை, தள்ளுபடி செய்துள்ளது.