எதிர்க்கட்சி உட்பட நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை தொடா்ந்து நாடாளுமன்றத்தில் விசேட உரையபற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரிந்து நின்ற காலம் போதும் எனத் தொிவித்த அவா் , அனைவரும் ஒன்றிணைந்து புதிய நடைமுறை ஒன்றை உருவாக்க ஒன்றிணையுமாறு அவர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளாா்.
மேலும் தனது பதவிப்பிரமாணத்தை நாடாளுமன்றுக்கு வௌியில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.